மும்பை பங்குசந்தையில் ஏற்றம் காரணமாக தங்கம்-வெள்ளி விலை குறைந்தது

மும்பை பங்குசந்தையில் ஏற்றம் காரணமாக தங்கம் மற்றும் வெள்ளி விலை அதிரடியாக குறைந்துள்ளது.

நாடு முழுவதும் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பு முடிவுகள், பங்கு சந்தையில் எதிரொலித்து காணப்படுகிறது. இதன் தாக்கம் தங்கம் மற்றும் வெள்ளி விலையிலும் எதிரொலித்துள்ளது. அதன்படி, சென்னையில் 22 காரட் தங்கம் ஒரு கிராம் 31 ரூபாய் குறைந்து 3 ஆயிரத்து 19 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. சவரனுக்கு 248 ரூபாய் குறைந்து 24 ஆயிரத்து 152 ரூபாய்க்கு விற்பனை ஆகிறது.

இதேபோல 24 காரட் தங்கம் கிராமுக்கு 31 ரூபாய் குறைந்து 3 ஆயிரத்து 166 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. தங்கத்தின் விலை குறைந்து இருப்பதால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

இதேபோன்று, வெள்ளி விலை கிராமுக்கு 40 ரூபாய் 25 காசுகளுக்கும் ஒரு கிலோ வெள்ளி 40 ஆயிரத்து 25 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது. வெள்ளி விலை ஒரு கிலோவுக்கு 3 ஆயிரம் வரை குறைந்துள்ளது.

Exit mobile version