அரசு பள்ளியில் புதிதாக சேர்ந்த மாணவ, மாணவிகளுக்கு அரை சவரன் தங்க நாணயத்தை கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ பரிசாக வழங்கினார்.
மதுரை மாவட்டம் பரவையில் செயல்பட்டு வரும் அரசு நடுநிலைப் பள்ளியை, உயர்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டது. இதற்காக கட்டப்பட்ட புதிய கட்டிடத்தை கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ திறந்து வைத்தார். 2018-19ம் கல்வியாண்டில் புதிதாக சேர்ந்த உயர்நிலைப் பள்ளி மாணவ, மாணவிகள் 10 பேருக்கு அரை பவுன் தங்க நாணயங்கள் பரிசளித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் செல்லூர் ராஜூ, முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி விவசாய குடும்பத்தில் பிறந்தவர் என்பதால், ஏழைகளின் நிலையை நன்றாக அவர் அறிந்துள்ளதாக கூறினார்.
திமுக ஆட்சியில் கல்வித் தரம் 22.8 சதவீதமாக இருந்ததாக கூறிய அவர், அதிமுக ஆட்சியில் 44 சதவீதமாக உயர்ந்துள்ளதாக அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்தார். பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கல்வி துறையில் பல மாற்றங்களை மேற்கொண்டு வருவதாக அவர் குறிப்பிட்டார்.