சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு துபாயில் இருந்து இண்டிகோ ஏர்லைன்ஸ் மற்றும் எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் பயணிகள் வந்தன. இதனை தொடர்ந்து மலேசியா கோலாலம்பூரில் இருந்து, ஏர் ஏசியா பயணிகள் விமானமும் வந்தது. இந்த 3 விமானங்களில் பெருமளவு தங்கம் கடத்தி வரப்படுவதாக, சென்னை விமான நிலைய சுங்கத்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து 3 விமானங்களில் வந்த பயணிகளின் உடமைகளை தீவிரமாக பரிசோதித்தனர். அப்போது மூன்று விமானங்களில் வந்த மூன்று பயணிகள், சுமார் 4 கிலோ எடை கொண்ட தங்க கம்பி மற்றும் கட்டிகளை கொண்டு வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. தங்கத்தை பறிமுதல் செய்த சுங்கத்துறையினர் அதனை கடத்தி வந்தவர்களிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
மலேசியா, துபாய் நாடுகளில் இருந்து கடத்தி வரப்பட்ட 2 கோடி ரூபாய் மதிப்புள்ள தங்க கட்டிகள் பறிமுதல்!
-
By Web team
- Categories: தமிழ்நாடு
- Tags: chennai airportgold barsMalaysia and Dubaiseizedsmuggled
Related Content
சென்னை விமான நிலையத்தின் புதிய ஒருங்கிணைந்த முனைய கட்டடத்தை பிரதமர் 8-ந் தேதி திறந்து வைக்கிறார்.
By
Web team
April 7, 2023
ஒன்றரை லட்சம் மதிப்பிலான கஞ்சா பறிமுதல் !
By
Web team
February 13, 2023
சென்னை விமான நிலையத்தில் விமான பயணிகள் எண்ணிக்கை பெருமளவு அதிகரிப்பு..!
By
Web team
February 11, 2023
சென்னை விமானநிலையத்தில் பயன்பாடு இன்றி கிடக்கும் விமானங்கள்!
By
Web team
February 8, 2023
கோவை கார் வெடிப்பு சம்பவத்தில் கைப்பற்றப்பட்ட 120 கிலோ வெடி மருந்துகள் அழிப்பு!
By
Web team
February 8, 2023