தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரங்கள்

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை 424 ரூபாய் சரிந்து 30 ஆயிரத்து 744 ரூபாய்க்கு விற்பனையாகிறது.

நேற்று ஒரே நாளில் 512 ரூபாய் அதிகரித்து வரலாறு காணாத அளவாக  ரூ.30,000 தாண்டிய தங்கத்தின் விலை, இன்று சவரனுக்கு 424 ரூபாய் குறைந்துள்ளது. 24 கேரட் தங்கத்தின் விலை கிராமுக்கு 53 ரூபாய் குறைந்து 4,091 ரூபாய்க்கும், சவரனுக்கு 424 ரூபாய் குறைந்து 32, 728 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது.

22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு 53 ரூபாய் குறைந்து 3 ஆயிரத்து 843 ரூபாயாகவும், சவரனுக்கு 424 ரூபாய் குறைந்து 30,744 ரூபாயாகவும் விற்பனையாகிறது.

வெள்ளியை பொருத்தவரை, கிராமுக்கு 1 ரூபாய் 20 காசுகள் குறைந்து 51 ரூபாய்க்கும், ஒரு கிலோ பார் வெள்ளி ஆயிரத்து 200 ரூபாய் குறைந்து 51,000 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது.

Exit mobile version