சென்னையில் தங்கம், வெள்ளி விலை குறைவு

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை, சவரனுக்கு 136 ரூபாய் குறைந்து 26 ஆயிரத்து 648 ரூபாய்க்கு விற்பனையாகிறது.

ஆபரணத் தங்கம் நேற்று சவரனுக்கு 26 ஆயிரத்து 784 ரூபாயாக இருந்தது. இன்று கிராமுக்கு 17 ரூபாய் குறைந்து, 3 ஆயிரத்து 331 ரூபாய்க்கும், சவரன் 26 ஆயிரத்து 648 ரூபாய்க்கும் விற்பனையாகிறது. 24 கேரட் தங்கம் கிராம் ஒன்றுக்கு 17 ரூபாய் குறைந்து, 3 ஆயிரத்து 488 ரூபாய்க்கும், சவரன் 27 ஆயிரத்து 904 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளி கிராமுக்கு 30 காசுகள் குறைந்து 44 ரூபாய் 20 காசுகளுக்கும், கிலோ வெள்ளி 300 ரூபாய் குறைந்து 44 ஆயிரத்து 200 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.

Exit mobile version