தேனி மாவட்டம் மேகமலை செல்லும் மலைச்சாலையில் உள்ள 18 கொண்டை ஊசி வளைவுகளுக்கு தமிழ் பூக்களின் பெயர்களை வைத்துள்ளது மக்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.
தேனி மாவட்டம் சின்னமனூரில் இருந்து 45 கிமீ தொலைவில் உள்ளது மேகமலை என்னும் அழகிய மலைகிராமம். மேகமலை பகுதிக்கு கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் 87 கோடி ரூபாய் செலவில் சாலை வசதி செய்து தரப்பட்டது. இதனை தொடர்ந்து இப்பகுதிக்கு வெளி மாவட்டங்கள் மட்டுமின்றி வெளி மாநிலங்களிலிருந்தும் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்தது. இந்நிலையில் மேகமலைக்கு செல்லும் வழியிலுள்ள 18 கொண்டை ஊசி வளைவுகளுக்கும் பண்டைய தமிழ் பூக்களின் பெயர்களான குறிஞ்சிப்பூ, முல்லைப்பூ, மருதம்பூ, வெட்சிப்பூ வஞ்சிப்பூ, தும்பைப் பூ, வாழைப்பூ, காந்தட்பூ, மகிழம் பூ, தாழம்பூ, பிச்சிப்பூ, குவளைப்பூ, அனிச்சம்பூ, இருவாட்சிப்பூ, கொன்றைப்பூ, வேங்கைப்பூ, மல்லிகை பூ, தாமரைப்பூவின் பெயர் சூட்டப்பட்டுள்ளது. இதற்கு அனைத்து தரப்பு மக்களும் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.