மத்திய அரசு கொள்முதல் செய்யும் கொரோனா தடுப்பூசிகள், மாநிலங்களுக்கு இலவசமாக வழங்கப்படும் என மத்திய சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது
இந்தியாவில் கோவாக்சின் மற்றும் கோவிஷீல்டு ஆகிய இரண்டு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகிறது.
இதில் சீரம் நிறுவனம் தயாரிக்கும் கோவிஷீல்டு தடுப்பூசி, மாநில அரசுகளுக்கு 400 ரூபாய்க்கும், தனியார் மருத்துவமனைகளுக்கு 600 ரூபாய்க்கும் விநியோகிக்கப்படும் என அந்நிறுவனம் அண்மையில் தெரிவித்தது.
இந்நிலையில் மாநில அரசுகளுக்கு மத்திய அரசால் வழங்கப்படும் கொரோனா தடுப்பூசிகள் முற்றிலும் இலவசமாக வழங்கப்படும் என்று சுகாதார அமைச்சகம் அறிவித்துள்ளது.
கோவாக்சின் மற்றும் கோவிஷீல்டு ஆகிய 2 தடுப்பூசிகளையும் 150 ரூபாய்க்கு மட்டுமே மத்திய அரசு கொள்முதல் செய்யும் என்றும் மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெளிவுபடுத்தியுள்ளது.