கோதாவரி – காவிரி இணைப்பு திட்டம்: பாமக நிறுவனர் ராமதாஸ் வரவேற்பு

கோதாவரி – காவிரி இணைப்பு திட்டத்திற்கு பாமக நிறுவனர் ராமதாஸ் வரவேற்பு தெரிவித்துள்ளார்

கோதாவரி ஆற்றை கிருஷ்ணா ஆற்றுடன் இணைப்பது, கிருஷ்ணா ஆற்றை காவிரியுடன் இணைப்பது மூலம் கடலில் கலக்கும் நீர் தமிழ்நாட்டின் கடைமடைப் பாசனப் பகுதிகளுக்கு கொண்டு செல்லப்படும் என்று நிதின் கட்கரி கூறியுள்ளதை ராமதாஸ் சுட்டிக்காட்டி உள்ளார். தமிழகத்தின் மீதான அமைச்சரின் அக்கறை பாராட்டத்தக்கது என்று ராமதாஸ் கூறியுள்ளார். கடந்த 50 ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டிருந்த கோதாவரி- காவிரி இணைப்பு திட்டத்திற்கு செயல்வடிவம் கொடுக்க மத்திய அரசு முன்வந்திருப்பது தமிழகத்திற்கு கிடைக்கும் நன்மை என்று குறிப்பிட்டுள்ள ராமதாஸ், இந்தத் திட்டம் செயல்படுத்தப்பட்டால் தமிழகத்திற்கு காவிரியில் ஆண்டுக்கு குறைந்தது 200 டி.எம்.சி தண்ணீர் கூடுதலாக இருக்கும் என்று தெரிவித்துள்ளார். தமிழகத்தின் நன்மைக்கான இந்தத் திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்று மத்திய அரசுக்கு தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வந்ததாகவும் இந்தத் திட்டம் காய்ந்த பூமியான தமிழகத்தை பசுமை பூமியாக மாற்றும் என்றும் ராமதாஸ் குறிப்பிட்டுள்ளார்.

Exit mobile version