கிருஷ்ணகிரியில் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு களைகட்டிய ஆட்டுச்சந்தை

இஸ்லாமியர்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான பக்ரீத் பண்டிகை வருகிற12ம் தேதி கொண்டாடப்படுகிறது. இதையடுத்து, பிரபலமான குந்தாரப்பள்ளி ஆட்டு சந்தையில் சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இருந்து வெள்ளாடு, செம்மறி ஆடு, குரும்பை ஆடுகள் என மொத்தம் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆடுகள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டு இருந்தன. கேரளா, கர்நாடகா ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்தும், ஆடுகளை வாங்குவதற்காக வியாபாரிகள் வந்திருந்தனர்.ஒரு ஜோடி ஆடுகள்12 ஆயிரம் ரூபாயிலிருந்து 50 ஆயிரம் ரூபாய் வரை விற்பனையானது. இதனால் நல்ல லாபம் கிடைத்திருப்பதாக வியாபாரிகள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.

Exit mobile version