கோவா முதல்வர் உடல்நிலையில் மேலும் பின்னடைவு

கோவா மாநில முதலமைச்சர் மனோகர் பாரிக்கர் உடல்நலம் மேலும் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கோவா மாநிலத்தில் பாஜக தலைமையிலான கூட்டணியில் கோவா பார்வர்டு கட்சி, மகாராஷ்டிராவாடி கோமந்தக் கட்சி மற்றும் 3 சுயேட்சைகள் அங்கம் வகிக்கின்றன. இந்நிலையில் கடந்த ஆண்டு, முதலமைச்சர் மனோகர் பாரிக்கரின் உடல்நலம் மிகவும் பாதிக்கப்பட்டது. மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.

இதையடுத்து, அவரது உடல்நலம் தேறிவந்தது. இந்தநிலையில், கடந்த 31ஆம் தேதி முதலமைச்சர் மனோகர் பாரிக்கரின் உடல்நிலை மேலும் பாதிக்கப்பட்டதால், டெல்லியில் தீவிர மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார். இதற்கிடையே நேற்றிரவு மனோகர் பாரிக்கரின் உடல்நிலையில் மேலும் பின்னடைவு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

இதனிடையே மனோகர் பாரிக்கர் முதலமைச்சர் பதவியிலிருந்து விலகினால், புதிய முதலமைச்சராக தங்கள் கட்சியை சேர்ந்த சுதீன் தவலிக்கரை தேர்வு செய்யக்கோரி மகாராஷ்டிராவாடி கோமந்தக் கட்சி கூறி வருவது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version