தமிழகத்தில் புதிதாக தோற்றுவிக்கப்பட்ட மாவட்டங்களில், முதன்மைக் கல்வி அலுவலகங்களை தோற்றுவித்தல், அதற்கான பணியிடம் மற்றும் செலவினங்களை அனுமதித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையில், கள்ளக்குறிச்சி, தென்காசி, திருப்பத்தூர், ராணிப்பேட்டை மற்றும் செங்கல்பட்டு ஆகிய புதிய மாவட்டங்களில், முதன்மைக் கல்வி அலுவலகங்கள் தோற்றுவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், 92 புதிய பணியிடங்கள் தோற்றுவிக்கப்பட்டு, பணியாளர்கள் ஊதியம் தொடர்பான செலவினங்களுக்கு 4 கோடி ரூபாய்க்கு ஒப்புதல் வழங்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதிய முதன்மைக் கல்வி அலுவலகங்கள் தற்காலிக அரசு கட்டடத்தில் இயங்கவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும், தொடரும் மற்றும் தொடரா செலவினங்களான நிதி ஒப்பளிப்பு வழங்கலாம் என அரசு முடிவு செய்துள்ளதாகவும் அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது.