நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் நடைபெற்ற, பெரியார் பல்கலைக்கழக கல்லூரிகளுக்கு இடையேயான மகளிர் கோ-கோ விளையாட்டுப் போட்டிகளில் 400-க்கும் மேற்பட்ட வீராங்கனைகள் பங்கேற்றனர்.
பெரியார் பல்கலைக்கழகம் பல்வேறு விளையாட்டுப் போட்டிகளை கல்லூரிகள் அளவில் நடத்தி வருகிறது. இதன் ஒரு பகுதியாக, நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் உள்ள தனியார் கல்லூரி வளாகத்தில், பெரியார் பல்கலைக்கழக கல்லூரிகளுக்கு இடையேயான மகளிர் கோ-கோ விளையாட்டுப் போட்டிகள் இரண்டு நாட்களாக நடைபெற்றன. இப்போட்டியில் பெரியார் பல்கலைக்கழகத்திற்கு உட்பட்ட 34 அணிகள் கலந்து கொண்டன.
இதில் மொத்தம் 408 வீராங்கனைகள் கலந்து கொண்டு விளையாடினர். நாக் அவுட் முறையில் நடைபெற்ற இந்த போட்டிகளில், சேலம் ஏ.வி.எஸ் (AVS) கல்லூரி அணி முதலிடம் பெற்று வெற்றி பெற்றது. இதையடுத்து வெற்றி பெற்ற அணிகளுக்கு கோப்பைகள் மற்றும் பரிசுகள் வழங்கப்பட்டன.