“நடந்தாய் வாழி காவேரி திட்டம்” சுமார் 10 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பீட்டில் செயல்படுத்தப்பட இருப்பதாக பொதுப்பணித்துறை உயரதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
காவிரி ஆறு மாசுபடுவதை தடுக்க “நடந்தாய் வாழி காவேரி” என்ற திட்டம் தொடங்கப்படும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி 110 விதியின் கீழ் அறிவித்து இருந்தார். அதற்கு செயல் வடிவம் கொடுக்கும் வகையில் பொதுப் பணித்துறை முதன்மை செயலாளர் மணிவாசன் தலைமை 16 பேர் கொண்ட குழு அறிவிக்கப்பட்டுள்ளது.
நடந்தாய் வாழி காவேரி திட்டத்தை செயல்படுத்த விரிவான திட்ட அறிக்கை தயாரித்து அந்த திட்டத்தை செயல்படுத்த முடிவு செய்துள்ள தமிழக அரசு அதற்கான அரசாணையை வெளியிட்டுள்ளது. திட்ட அறிக்கை கிடைக்க பெற்றவுடன் சுமார் 10 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பீட்டில் இந்த திட்டம் செயல்படுத்தப்பட இருப்பதாக பொதுப்பணித்துறை உயரதிகாரி ஒருவர் தெரிவித்தார்.