உலக வெப்பமயமாதல் காரணமாக வேகமாக உருகி வரும் பனிப்பாறைகள்

உலக வெப்பமயமாதல் காரணமாக 2100ஆம் ஆண்டுக்குள் கடல் நீர்மட்டம் சுமார் 25 சென்டி மீட்டர் வரை உயரக்கூடும் என ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது.

அதிகரித்து வரும் உலக வெப்பமயமாதல் காரணமாக பனிப்பாறைகள் வேகமாக உருகி வருகின்றன. இதனால், கடல்நீர் மட்டமும் உயர்ந்து வருகிறது. இதுகுறித்து, அமெரிக்காவின் நிறுவனம் ஒன்று மேற்கொண்ட ஆய்வின் அறிக்கையை அண்மையில் வெளியிட்டது. அதில், பனிப்பாறைகள் மிக வேகமாக உருகி வருவது கண்டறியப்பட்டுள்ளது. இதேநிலை தொடர்ந்தால், வரும் 2100ஆம் ஆண்டுக்குள் கடல்நீர் மட்டம் சுமார் 25 சென்டி மீட்டர் உயரக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2100ஆம் ஆண்டுக்குள் உலக அளவில் சராசரியாக 18 முதல் 36 சதவீதப் பனிப்பாறைகள் உருகிவிடும் என்றும் அந்த ஆய்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Exit mobile version