முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை தமிழ் மாநில காங்கிரஸ் கட்சித் தலைவர் ஜி.கே.வாசன் சந்தித்து பேசினார். மக்களவை தேர்தலில் அதிமுக தலைமையிலான மெகா கூட்டணி அமைக்கப்பட்டுள்ளது. இந்த மெகா கூட்டணியில் தமாகாவும் இணைந்துள்ளது. இந்த நிலையில், சென்னை கிரீன்வேஸ் இல்லத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை மரியாதை நிமித்தமாக தமிழ் மாநில காங்கிரஸ் கட்சித் தலைவர் ஜி.கே.வாசன் சந்தித்து பேசினார்.
இந்த சந்திப்பின்போது, அமைச்சர்கள் தங்கமணி, கடம்பூர் ராஜூ, கே.பி.அன்பழகன் மற்றும் அதிமுக நிர்வாகிகள், தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி சார்பில், ஞான தேசிகன், கோவை தங்கம், விடியல் சேகர் உள்ளிட்ட தமாகா நிர்வாகிகள் உடன் இருந்தனர்.