பல்வேறு துறைகளில் தமிழகம் சிறந்து விளங்கி வருகிறது – ஜி.கே.வாசன் பாராட்டு

பல்வேறு துறைகளில் தமிழகம் சிறந்து விளங்கி வருவதாக தமிழ் மாநில காங்கிரஸ் கட்சித் தலைவர் ஜி.கே.வாசன் பாராட்டுத் தெரிவித்தார்

சூலூர் சட்டமன்ற வேட்பாளர் கந்தசாமியை ஆதரித்து தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் பிரசாரம் மேற்கொண்டார். அமைச்சர்கள் எஸ்.பி. வேலுமணி, ஓ.எஸ். மணியன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

பிரசாரத்தின்போது பேசிய ஜி.கே.வாசன், முதல்வர் மற்றும் துணை முதல்வர் மிகவும் சாதாரணமானவர்கள் போல் எளிமையாக இருப்பதாக குறிப்பிட்டார். இருவரும் இணைந்து பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகின்றனர் என்றும் பாராட்டுத் தெரிவித்தார்.

தொட்டில் குழந்தை திட்டத்தை கொண்டு வந்தவர் ஜெயலலிதா என்று குறிப்பிட்ட ஜி.கே. வாசன், தற்போது குழந்தை கடத்தலில் ஈடுபடுபவர்களுக்கு எதிரான அரசு நடவடிக்கை எடுத்து வருகின்றது என்றும் தவறு செய்பவர்களுக்கு உச்சகட்ட தண்டனை கிடைக்கும் என்றும் உறுதிப்பட தெரிவித்தார்

Exit mobile version