தேர்தலில் ஓட்டுக்காக பணம் கொடுத்தாலும், வாங்கினாலும் வழக்கு பதிவு செய்யப்படும் என்றும் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ எச்சரிக்கை விடுத்துள்ளார். தலைமை செயலகத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், தேர்தல் நடத்தை விதிமுறை மீறல் தொடர்பாக இதுவரை 46.29 கோடி ரூபாய் கைப்பற்றப்பட்டுள்ளது என்றும் 69.03 கோடி மதிப்புள்ள 212.5 கிலோ தங்கம், 327.5 கிலோ வெள்ளி உள்ளிட்ட விலையுயர்ந்த பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன என்றும் குறிப்பிட்டார்.
தொடர்ந்து பேசிய அவர், ஓட்டுக்காக பணம், பரிசுப்பொருட்கள் கொடுப்பதும் குற்றம், வாங்குவதும் குற்றம் என்று தெரிவித்ததோடு இரண்டு குற்றமும் வழக்காக பதிவு செய்யப்படும் எனவும் எச்சரிக்கை விடுத்தார்.தமிழகத்தில் 3.5 லட்சம் ஊழியர்களுக்கு தேர்தல் பணிக்கான பயிற்சி அளிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.