திருடிய pendrive-ஐ திருப்பிக் கொடுத்து விடு … ஆசிரியர்களின் அன்பு கடிதம்

கேரளாவில் பள்ளி ஒன்றில் நடைபெற்ற திருட்டு சம்பவத்தில்  எடுத்துச் சென்ற pendrive-ஐ திருப்பி தருமாறு திருடனுக்கு ஆசிரியர்கள் கடிதம் எழுதியுள்ளனர்.

கேரள மாநிலம் கண்ணூரில் அமைந்துள்ள தனியார் பள்ளியில் கடந்த 29ம் தேதி திருட்டு நடைபெற்றது. இதில் தலைமை ஆசிரியர் அறையில் இருந்த 3 லேப்டாப்கள், pendrive, சிசிடிவி காட்சிகளின் ஹார்ட் டிஸ்க் ஆகியவை திருடப்பட்டன. ஏற்கனவே 7 மாதங்களுக்கு முன்பு இதே பள்ளியில் திருட்டு சம்பவம் நிகழ்ந்துள்ளது.

இந்நிலையில் திருடப்பட்ட பொருட்களில் pendrive-ஐ  மட்டும் திருப்பி தந்துவிடுமாறு அந்த பள்ளி ஆசிரியர்கள் சார்பில் கடிதம் எழுதப்பட்டுள்ளது. அதில் தான் ஆசிரியர்களின் வருகைப்பதிவேடு அடங்கிய தகவல்கள் இருப்பதாகவும், அதனை கொடுத்தால் மட்டுமே தங்களுக்கு மாதச் சம்பளம் கிடைக்கும் என்பதால்  தயவுசெய்து pendrive-ஐ கொடுக்குமாறு கடிதம் எழுதி சமூக வலைத்தளங்களில் பதிவிட அது வைரலானது.

எப்படியும் pendrive கிடைத்துவிடும் என்ற நம்பிக்கையில் ஆசிரியர்கள் காத்திருக்கின்றனர்.

Exit mobile version