மார்ச் 5ஆம் தேதி விண்ணில் பாயும் ஜிஐசாட்- 1 அதிநவீன செயற்கைகோள்

பூமியை கண்காணிக்கும் ஜிசாட் 1 என்ற அதிநவீன செயற்கைகோள், மார்ச் 5ஆம் தேதி விண்ணில் செலுத்தப்பட உள்ளதாக இஸ்ரோ அறிவித்துள்ளது.

இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோ, உள்நாடு மற்றும் வெளிநாட்டு செயற்கைக் கோள்களை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தி வருகிறது. அந்த வகையில், பூமியை கண்காணிக்கும் ஜிசாட் 1 என்ற அதிநவீன செயற்கைக் கோளை,  ஜி.எஸ்.எல்.வி- எப் 10 ராக்கெட் மூலம், மார்ச் 5ம் தேதி விண்ணில் செலுத்தப்படவுள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.

சுமார் 2 ஆயிரத்து 275 கிலோ எடையுள்ள இந்த செயற்கைக்கோள், ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் உள்ள இரண்டாவது ஏவுதளத்தில் இருந்து விண்ணில் செலுத்தப்படுகிறது.

Exit mobile version