காதலனை பழி வாங்க நண்பர்களை அனுப்பிய காதலி

காதல் விவகாரத்தில் கல்லூரி மாணவரை தாக்கிய பணம் கேட்டு மிரட்டியது தொடர்பான சிசிடிவி கேமரா காட்சிகளை கொண்டு முதல்நிலைக் காவலர் மகன் உட்பட இரண்டு பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

சென்னை கீழ்ப்பாக்கத்தை சேர்ந்த நவைத் அகமது என்பவர் இருசக்கர வாகனத்தில் வீட்டிற்கு செல்லும் போது மர்ம நபர்களால் கடத்தப்பட்டார். தொடர்ந்து நவைத் அகமதுவின் கைகடிகாரம் செல்போனை பறித்ததுடன் பணம் கேட்டு கட்டையால் தாக்கியுள்ளனர். இதுதொடர்பாக வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அதன் அடிப்படையில், சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்த போலீசார், லெனின் என்பவர் தலைமறைவான நிலையில், முதல்நிலைக் காவலர் மகன் பாஸ்கர் மற்றும் சரவணன் ஆகியோரை கைது செய்தனர். தொடர்ந்து போலீசார் மேற்கொண்ட விசாரணையில், நவைத் அகமது கடந்த நான்கு நாட்களுக்கு முன்பாக தனது காதலியான வாசவியை சந்தித்த போது, அடித்ததாகவும், அதற்கு பழிவாங்க தனது நண்பர்களை வாசவி அனுப்பியதும் தெரிய வந்தது. இதனையடுத்து, துணை ஆணையர் ராஜேந்திரன் உத்தரவின் பேரில் விசாரணை மேற்கொண்ட போலீசார், லெனின் என்பவர் தலைமறைவான நிலையில், இருவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Exit mobile version