சமூக வலைத்தளங்கள் இல்லாமல் இன்றைய மக்கள் இல்லை என்ற நிலை வந்துவிட்டது. குறிப்பாக இளைஞர்கள் 24 மணி நேரமும் அதற்கு அடிமையாய் இருக்கிறார்கள். இந்நிலையில் விளையாட்டாய் சிறுமி செய்த செயல் அவருக்கு மரணத்தை பரிசாக கொடுத்த சம்பவம் அதிர்ச்சியளித்துள்ளது.
மலேசியாவை சேர்ந்த 16 வயது சிறுமி ஒருவர், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு ஒன்றை இட்டுள்ளார். அதில், “நான் இங்கு வாழ வேண்டுமா? இல்லை சாக வேண்டுமா?” உங்கள் ஓட்டினை பதிவு செய்யுங்கள் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. உயிர்வாழ்வது குறித்து நடத்தப்பட்ட அந்த வாக்குப்பதிவில் அவரை பின்தொடருபவர்களில் 69%பேர், இதனை விளையாட்டாக எடுத்துக்கொண்டு செத்துப்போக சொல்லிருக்கிறார்கள். இதனால் மனவருத்தமடைந்த சிறுமி மலேசியாவின் கிழக்கு பகுதியில் உள்ள கட்டடத்தின் மேலிருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார்.
இந்த சம்பவத்தை கேள்விப்பட்ட இன்ஸ்டாகிராம் நிறுவனம் அதிர்ச்சியடைந்தது. சிறுமியின் கணக்கை ஆய்வு செய்த போது, அவர் இறந்ததாக வந்த தகவலை அடுத்து அவரை பின்தொடருபவர்களில் 80% மேற்பட்டவர்கள் சிறுமி வாழ வேண்டும் என கருத்துக்களை பதிவிட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.
இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள மலேசிய எம்.பி. ராம்கர்பால் சிங், யாரெல்லாம் சிறுமியை செத்துப்போக சொல்லி வாக்களித்தார்களோ அவர்கள் அனைவரும் குற்றவாளிகள் என கூறியுள்ளார்.
இனிமேலாவது சமூக வலைத்தளங்களில் பதிவுகளையும், கருத்துக்களையும் கவனமாக தெரிவியுங்கள்.