தமிழகத்தில் கடந்தாண்டு, 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குழந்தைத் திருமணங்கள் தடுக்கப்பட்டுள்ளதாக, சமூக நலத்துறை அமைச்சர் சரோஜா தெரிவித்துள்ளார்.
நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், சமூக நலத்திட்டங்கள், பெண் குழந்தைகள் பாதுகாப்பு, பெண் பாலின விகிதம் அதிகரித்தல் குறித்த ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் சமூக நலன் மற்றும் சத்துணவுத் திட்டத்துறை அமைச்சர் சரோஜா கலந்து கொண்டு, ஆய்வு மேற்கொண்டார்.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர், தமிழகத்தில் கடந்தாண்டு, 10 ஆயிரத்து 120 குழந்தைத் திருமணங்கள் தடுக்கப்பட்டுள்ளதாகவும், குழந்தைத் திருமணங்களை தடுப்பதில் இந்திய அளவில் தமிழகம் முதலிடம் வகிப்பதாகவும் தெரிவித்தார்.