நடைமுறை வாழ்வில் தூய தமிழிலேயே பேசுகிற தனித்தமிழ்ப் பற்றாளர்களுக்குப் பரிசு வழங்கப்பட உள்ளதாகத் தமிழ்நாடு அரசு செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலித் திட்ட இயக்ககம் அறிவித்துள்ளது.
தூய தமிழில் பேசுவதை ஊக்குவிக்கும் வகையில், நடைமுறை வாழ்வில் தூய தமிழில் பேசும் தகுதி வாய்ந்த 3 தனித்தமிழ்ப் பற்றாளர்களுக்கு ஒவ்வொருவருக்கும் ஐயாயிரம் ரூபாய் பரிசுத் தொகையும் சான்றிதழும் வழங்கப்பட உள்ளன. தகுதி வாய்ந்தவர்கள் சொற்குவை.காம் ((sorkuvai.com)) என்ற வலைத்தளத்தில் உள்ள விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து நிரப்பிச் செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலித் திட்ட இயக்ககத்தின் முகவரிக்கு வரும் பத்தாம் தேதிக்குள் அனுப்ப வேண்டும். விண்ணப்பிப்போர் நாடறிந்த தமிழறிஞர்கள் இருவரிடம் தம் தனித்தமிழ்ப் பற்றை உறுதிசெய்து நற்சான்றிதழ் பெற்று இணைக்க வேண்டும். சான்றளிக்கும் தமிழறிஞர்களின் ஒருபக்க அளவிலான தன்விவரக் குறிப்புகளையும் ஒளிப்படத்துடன் இணைக்க வேண்டும்.