திருச்சி திருவெறும்பூரில் அரசு பள்ளிக்கு சீர் வழங்கும் விழாவில், ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
துவாக்குடி வடக்குமலை அரசு நடுநிலை பள்ளி தலைமை ஆசிரியர் கருணாம்பாள் சாதாரண கட்டிட பள்ளிக்கூடமாக இருந்த பள்ளியை ஸ்மார்ட் பள்ளியாக மாற்ற திட்டமிட்டார். தனது சொந்த பணத்திலும் தனியார் அமைப்புகளில் நிதி பெற்று பள்ளியின் சுற்றுச்சுவர், வகுப்பு விரிவாக்கம், புதிய வகுப்பு கட்டிடம், கலை நிகழ்சிகள் நடத்த கலை மகள் அரங்கம், சுத்திகரிப்பு குடிநீர் என பள்ளியை புதுப்பொலிவு பெற செய்துள்ளார்.
பள்ளியில் பயிலும் மாணவ மாணவிகளுக்கு கல்வி மட்டுமின்றி கணினி பயிற்சி, ஓவியப் பயிற்சி, கராத்தே பயிற்சி, விளையாட்டு, இயல், இசை, நாடகம் என அனைத்தை கற்க வேண்டும் என்ற முனைப்பில் அதற்கான நடவடிக்கையிலும், ஈடுபட்டுள்ளார். இந்நிலையில் பொதுமக்கள், பெற்றோர்கள், தன்னார்வ அமைப்புகள் அரசு பள்ளி மாணவ மாணவிகளை ஊக்குவிக்கும் முயற்சியாக பள்ளிக்கு கொடுத்த சீர்வரிசை பொருட்களுடன் ஊர்வலமாக அழைத்து வரப்பட்டனர்.