3 தலைமுறை குடும்ப பெண்களுடன் செல்ஃபி அனுப்பினால் பரிசு

தேசிய பெண் குழந்தைகள் தினத்தை முன்னிட்டு திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் வித்தியாசமான அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

தேசிய பெண் குழந்தைகள் தினம் ஒவ்வொரு ஆண்டும்  ஜனவரி 24ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. அதன்படி இந்த ஆண்டும் தேசிய பெண் குழந்தைகள் தினத்தை கொண்டாடும் வகையில் திருவண்ணாமலை ஆட்சியர் கந்தசாமி செல்ஃபி போட்டோ அனுப்பினால் பரிசு வழங்கப்படும் என போட்டி ஒன்றை அறிவித்துள்ளார்.

செல்ஃபி எடுப்பது தற்போது அதிகரித்து வரும் நிலையில், இந்த போட்டியில் பங்குபெற நினைப்பவர்கள்  தங்கள் வீட்டில் உள்ள 3 தலைமுறை பெண்களோடு செல்ஃபி எடுத்திருக்க வேண்டும். அதாவது பாட்டி, அம்மா, தற்போதைய தலைமுறை பெண் என 3 பெண்கள் அந்த போட்டோவில் இடம் பெற்றிருக்க வேண்டும். அந்த செல்ஃபி போட்டோவை 7397285643 என்ற எண்ணிற்கு அனுப்பி வைக்க வேண்டும். அனுப்பி வைக்கப்படும் புகைப்படங்களில் சிறந்த செல்ஃபி புகைப்படத்திற்கு பரிசு வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version