ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நடமாடும் ராட்சத முதலைகள்

புகழ்பெற்ற சுற்றுலா தளமான ஒகேனக்கல் தற்போது முதலைகளின் வாழ்விடமாக மாறியுள்ளது. தருமபுரி மாவட்டத்தில் உள்ள ஒகேனக்கல் காவிரி ஆற்றுக்கு அண்டை மாநிலங்களில் இருந்து சுற்றுலா பயணிகள் வந்து செல்வது வழக்கம். வெளி மாநிலம், வெளியூர், உள்ளூரில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் அருவியிலும், சீறிப்பாயும் ஆற்றுப்படுகையில் குளித்து மகிழ்ந்து வருகின்றனர். இந்நிலையில் தற்போது காவிரி ஆற்றுப்படுகையின் ஆங்காங்கே ராட்சத முதலைகளின் நடமாட்டம் அதிகரிக்க தொடங்கியுள்ளது. இதனால் அங்கு வரும் சுற்றுலா பயணிகள் மிகுந்த அச்சத்தில் உள்ளனர். எனவே அங்கு திரியும் முதலைகளை பிடித்து முதலைகள் மறுவாழ்வு மையத்தில் விட வேண்டும் என சுற்றுலா பயணிகள் அரசிடம் கோரிக்கை வைத்துள்ளனர்.

Exit mobile version