கதர் கிராமத் தொழில் வாரியத்தால் தயாரிக்கபட்ட பொருட்கள் அறிமுகம்

தமிழ்நாடு கதர் கிராமத் தொழில் வாரியத்தின் மூலம் தயாரிக்கப்பட்ட SHAMPOO, BODY WASH, HAND WASH LIQUID ஆகியவற்றை மக்களின் பயன்பாட்டிற்காக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிமுகப்படுத்தினார்.

சிவகங்கை மாவட்டம் கண்டனூரில் அமைந்துள்ள இந்த வாரியத்திற்கு சொந்தமான வளாகத்தில், 30 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் தயாரிக்கப்பட்டுள்ள இந்த பொருட்கள், மக்களின் விற்பனைக்காக அறிமுகப்படுத்தப்பட்டது. சென்னையில் உள்ள தலைமைச் செயலகத்தில் இருந்து காணொளி காட்சி மூலம் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இதனை அறிமுகப்படுத்தினார். நிகழ்ச்சியில் கதர் மற்றும் கிராமத் தொழில்கள் வாரியத் துறை அமைச்சர் பாஸ்கரன் உட்பட அரசு அதிகாரிகள் பலர் பங்கேற்றனர்.

Exit mobile version