ஜெர்மனிகாரரை அசரவைத்த தமிழக மாணவியின் நேர்மை

கீழே கிடந்த பணத்தை ஆசிரியரிடம் எடுத்து கொடுத்த ஏழாம் வகுப்பு மாணவியின் நேர்மைக்கு பரிசாக ஜெர்மனியில் இருந்து 17 வகையான பரிசுப் பொருட்கள் அனுப்பப்பட்டுள்ளது.

சிவகங்கை மாவட்டம் தேவகோட்டையில், சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் ஏழாம் வகுப்பு படித்து வரும் மாணவி மகாலெட்சுமி. இவர் சமீபத்தில் கீழே கிடந்த பணத்தை நேர்மையாக பள்ளியில் உள்ள வகுப்பாசிரியரிடம் கொடுத்துள்ளார். அதற்காக அங்குள்ள ஆசிரியர்கள் வகுப்பறையில் மற்ற மாணவர்கள் மத்தியில் கைகளை தட்டி, பாக்ஸ் ஒன்றையும் பரிசாக வழங்கி பாராட்டியுள்ளார். அதன் பின்பு இந்த நேர்மையை சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார்.

இதனை ஜெர்மனியில் உள்ள யோகானந்தன் புத்ரா என்பவர் பார்த்துள்ளார். மாணவியின் நேர்மையான செயலை பாரட்ட நினைத்த அவர் ஜெர்மனியில் உள்ள 70க்கும் மேற்பட்ட பென்சில்கள், 30க்கும் மேற்பட்ட பேனாக்கள் , கலர் பென்சில்கள் என மொத்தம் 17 வகையான பரிசு பொருள்களை பள்ளிக்கு தபால் மூலம் அனுப்பி மாணவி மகாலெட்சுமிக்கு வழங்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

இதைப்பற்றி அந்த பள்ளி தலைமை ஆசிரியர் சொக்கலிங்கமிடம் கேட்டபோது, கடந்த வாரம், எங்கள் பள்ளி மாணவி மகாலெட்சுமி. கீழே விழுந்து கிடந்த பணத்தை எடுத்துக்கொண்டு வந்து எங்கள் பள்ளி வகுப்பாசிரியரிடம் கொடுத்துள்ளார். அதை நாங்கள் பாராட்டி சமூக வலைதளங்களில் இதை பற்றி பதிவு செய்தேன். அதை பார்த்த பலரும் இச்செயலை பாராட்டினார்கள்.

இதற்கிடையில் ஜெர்மனி நாட்டில் உள்ள யோகானந்தன் புத்ரா என்பவர் என்னுடைய மெயில் ஐடிக்கு மாணவி மகாலெட்சுமி பாராட்டி ஊக்கப்படுத்த வேண்டும் என்று பள்ளி முகவரியை வாங்கினார். 12.10.19 அன்று எதிர்பாராத விதமாக தபால் மூலம் 17 வகையான பரிசு பொருள்களை வாங்கி அனுப்பியுள்ளார். இதனால் மாணவி மகாலெட்சுமி ரொம்ப மகிழ்ச்சி அடைந்தார்” என்று தெரிவித்தார்.

Exit mobile version