அமைச்சர் செங்கோட்டையனுடன் ஜெர்மன் நாட்டு பள்ளி மாணவர்கள் சந்திப்பு

ஜெர்மன் நாட்டிலிருந்து இந்தியாவின் கலாச்சாரம் கலை மற்றும் அறிவியல் உள்ளிட்டவற்றை தெரிந்து கொள்ளும் வகையில் 16 மாணவ, மாணவர்கள் தமிழகம் வந்துள்ளனர்.  

அம்மாணவர்கள் தலைமை செயலகத்தில்  பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையனை சந்தித்து பேசினர்.இவர்கள் இவர்கள் முன்னதாக மலேசியா, பின்லாந்து ஆகிய நாடுகளுக்கு சென்று வந்துள்ளனர்.  அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களின் வீடுகளில் தங்கி, 14 நாட்கள் இங்குள்ள கலை, அறிவியல், பண்பாடு, கலாச்சாரம் உள்ளிட்டவற்றை  ஆய்வு செய்ய உள்ளனர். பின்னர், பொங்கல் பண்டிகையை கொண்டாடிவிட்டு ஜெர்மனி செல்கின்றனர். அவர்களுடன் நமது பள்ளி மாணவர்களும் ஜெர்மனி சென்று அங்கு கல்வி அறிவியல் பண்பாடு கலாச்சாரம் உள்ளிட்டவற்றை கற்க உள்ளனர். இதற்காக தமிழக அரசின் பள்ளிக்கல்வித்துறை சார்பில் மூன்று கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

Exit mobile version