முன்னாள் மத்திய அமைச்சர் ஜார்ஜ் ஃபெர்னாண்டஸ் காலமானார்

முன்னாள் பாதுகாப்புத் துறை அமைச்சர் ஜார்ஜ் ஃபெர்னாண்டஸ் இன்று காலமானார்.

தேசிய ஜனநாயகக் கூட்டணி அமைய முக்கியகாரணாமாக இருந்தவர்களுள் ஒருவரும் , வாஜ்பாயின் மந்திரிசபையில் பாதுகாப்புத்துறை அமைச்சராக இருந்தவர். 

ஆப்பரேஷன் லாஃபிங் புத்தா நடப்பதில் அமெரிக்காவின் அவதானிப்புத் தீவிரம் குறையக் காரணமாயிருந்தவரும் இவர்தான் என்று அரசியல் வட்டங்கள் பேசிக்கொள்ளும்.

கயா துப்பாக்கிச்சூட்டிற்கும் பிறக்  ஒரு ரயில்வே வேலை நிறுத்தம் ஒன்று நடத்தபட்டிருந்தது என்று ராமச்சந்திர குஹா தன் இந்தியா :காந்திக்குப்பிறகு நூலில் குறிப்பிடும் அந்த வேலை நிறுத்தப்போராட்டத்தை நடத்தியவரும் இவர்தான் .

இவர் தொழில்துறை அமைச்சராக இருந்தபோது “ கோகோ கோலா மற்றும் ஐபிஎம் ஆகிய நிறுவங்களை வெளியேற்றுவேன் என்றும் சூளுரைத்தார்”

கர்நாடக மாநிலம் மங்களூரில் கடந்த 1930ம் ஆண்டு ஜூன் 3ல் பிறந்த பெர்னாண்டஸ், கடந்த 1989 முதல் 90 வரை ரயில்வே அமைச்சராகவும் இருந்துள்ளார்.

1976ல் அவசர நிலை காலத்தில் பரோடா வெடிகுண்டு வழக்கில் கைது செய்யப்பட்ட பெர்னாண்டஸ் சிறை வாசத்தை அனுபவித்தார். இந்திரா காந்தி அமல்படுத்திய அவசர நிலையை கடுமையாக எதித்தவர்களில் பெர்னாண்டஸ் ஒருவர். அவசர நிலைக்கு பிறகு 1977ல் தொழில்துறை அமைச்சராக பதவி வகித்த இவர் எடுத்த நடவடிக்கையால், கோகோ கோலா நிறுவனம் இந்தியாவை விட்டு வெளியேறியது.

தொழில்சங்கத்தின் முன்னோடியாகவும் இருந்தவர் பெர்னாண்டஸ். மொரார்ஜி தேசாய் அமைச்சரவையில் மத்திய அமைச்சராக பெர்னாண்டஸ் இருந்துள்ளார். கொங்கன் ரயில்வே அமைய முக்கிய காரணமாக இருந்தவர்களில் இவரும் ஒருவர்.

பொக்ரானில் அணு ஆயுத சோதனை நடத்தப்பட வேண்டும் என்று வெளிப்படையாக அறிவித்தவர் பெர்னாண்டஸ். ராணுவ அமைச்சராக இருந்தபொழுது சியாச்சின் போர்க்களத்திற்கு 18 முறை சென்று ஆய்வு மேற்கொண்டார்.

குஜராத் கலவரத்தின் போதும், சூரத் கலவரத்தின் போதும் , கோத்ரா ரயிலெரிப்பின் போதும் தீவிர அரசியலில் இருந்த இவர் , கடந்த 2010 ம் ஆண்டு முதலே அல்ஜைமர் நோயால் அவதிப்படு வந்த இவர் தன்னுடைய 88 வது வயதில் உடல்நலக்குறைவால் டெல்லியில் இன்று காலை காலமானார்.

காத்திரமான இந்த அரசியல் தலைவரின் இறப்புக்கு தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். 

 

Exit mobile version