முழு வெளிப்படைத் தன்மையுடன் ஆசிரியர் பொது மாறுதல் மற்றும் பதவி உயர்வு கலந்தாய்வு நடைபெற்றதாக, கலந்தாய்வில் பங்கேற்ற ஆசிரியர்கள் மகிழ்ச்சி தெரிவித்தனர்.
அரசு பள்ளிகளில் காலியாக உள்ள பணியிடங்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வு நேற்று தொடங்கியது. முதல் நாளான நேற்று அரசு மேல்நிலைப்பள்ளிகள் மற்றும் நகராட்சி மேல்நிலைப்பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுக்கான பணியிட மாறுதல், பதவி உயர்வு கலந்தாய்வு நடைபெற்றது. அனைத்து மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலகங்களிலும் EMIS இணையதளத்தில் கலந்தாய்வு நடைபெற்றது. சென்னை எழும்பூரில் உள்ள மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் அலுவலகத்தில், முதன்மை அலுவலர் அனிதா தலைமையில் ஆன்லைனில் கலந்தாய்வு நடைபெற்றது. மாநிலம் முழுவதும் நேற்றைய பணியிட மாறுதல் கலந்தாய்வுக்கு 450 பேரும், பதவி உயர்வு கலந்தாய்வுக்கு 500 பேரும் விண்ணப்பம் செய்திருந்தனர்.