5 மற்றும் 8ம் வகுப்புகளுக்கு இந்த ஆண்டே பொதுத்தேர்வு நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. இது தொடர்பாக மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் மூலம், மாவட்ட கல்வி அலுவலர் மற்றும் பள்ளிகளுக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. அதில், 5ம் வகுப்பு மற்றும் 8ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வு நடத்த ஆயத்த பணிகளை மேற்கொள்ளுமாறு முதன்மை கல்வி அலுவலர்கள் அறிவுறுத்தியுள்ளனர். 20 மாணவர்களுக்கு ஒரு தேர்வு மையம் அமைக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.
மாணவர்கள் குறைவாக உள்ள பள்ளிகளில் பயிலும் மாணவர்கள், அருகாமையில் உள்ள நடுநிலைப் பள்ளியில் தேர்வு எழுத ஏற்பாடு செய்ய வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. பாடங்களை பொறுத்தவரை 3ம் பருவத் தேர்வில் இருந்து கேள்விகள் கேட்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் மத்திய அரசு 5 மற்றும் 8ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வு நடத்த வேண்டும் என வலியுறுத்தியது. அதன் அடிப்படையில் இந்த திட்டம் அமல்படுட்டுள்ளது.