ஐந்து மற்றும் எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கும் கல்வி ஆண்டின் இறுதியில் பொதுத்தேர்வு நடத்தப்பட வேண்டும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்த திட்டத்தை அமல்படுத்துவதற்காக கல்வி உரிமைச் சட்டத்திலும் திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது. இத்திருத்தத்தில் ஐந்து மற்றும் எட்டாம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் ஆண்டு இறுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றால் மட்டுமே மேல்வகுப்புக்கு அனுப்ப வேண்டும் என்றும் தேர்ச்சி பெறாதவர்களுக்கு இரண்டு மாதத்தில் மறுதேர்வு நடத்தப்பட வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால் மாணவர்கள் தேர்ச்சி அடையவில்லை என்பதை காரணம் காட்டி அவர்களை பள்ளியை விட்டு அனுப்பக் கூடாது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய நடைமுறை குறித்து தமிழக அரசு ஆலோசனை நடத்தி வருகிறது.