ஈரோட்டில் வளர்ச்சி திட்டப்பணிகள் குறித்து சட்டப்பேரவை பொதுக் குழு ஆய்வு

ஈரோடு மாவட்டத்தில் வளர்ச்சித் திட்டப்பணிகள் குறித்து தமிழ் நாடு சட்டப்பேரவை பொது நிறுவன குழு ஆய்வு நடத்தியது.

ஈரோடு மாவட்டத்தில் வளர்ச்சித் திட்டப்பணிகள் குறித்து போக்குவரத்து கழக மண்டல அலுவலகத்தில் ஆய்வு நடைபெற்றது. இதில் சட்டப்பேரவை உறுப்பினர் செம்மலை, தென்னரசு, ஈஸ்வரன், சண்முகம் ஆகியோர் ஆய்வு பணிகளை மேற்கொண்டனர். இந்த ஆய்வுக்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சட்டமன்ற உறுப்பினர் செம்மலை, இங்குள்ள போக்குவரத்து பணிமனைகளில் அதிக பேருந்துகள் இயக்கப்படுவதாகவும், இங்குள்ள கழிவுகள் முறையாக அகற்றப்பட்டு சிறப்பாக செயல்படுவதாகவும் தெரிவித்தார். மேலும் தனியார் மற்றும் அரசு பேருந்துகளின் நேரப்பிரச்சனைகள் தீர்ப்பது தொடர்பாக, ஆட்சியரிடம் பரிந்துரை செய்யப்படும் என தெரிவித்தார்.

Exit mobile version