பெட்ரோல் டீசல் விலை உயர்வு

சென்னையில் பெட்ரோல், டீசல் விலை சற்று உயர்ந்துள்ளது.

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணையில் விலை அதிகரித்ததை தொடர்ந்து, இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை சற்று உயர்ந்து காணப்படுகிறது.

அதன்படி, சென்னையில் பெட்ரோல் நேற்றைய விலையில் இருந்து 6 காசுகள் உயர்ந்து 73 ரூபாய் 6 காசுகளாகவும்,டீசல் நேற்றைய விலையில் இருந்து 5 காசுகள் உயர்ந்து 69 ரூபாய் 37 காசுகளாகவும் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

3 நாட்களாக விலையில் மாற்றம் ஏற்படாமல் இருந்த நிலையில், இன்று பெட்ரோல், டீசல் விலை சற்று உயர்த்தப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version