திருப்பதி ஏழுமலையான் கோயில் பிரம்மோற்சவத்தின் ஐந்தாவது நாளை முன்னிட்டு ஏழுமலையானின் கருடசேவை நடைபெற்றது.
திருப்பதி ஏழுமலையான் கோயில் வருடாந்திர பிரம்மோற்சவம் அக்டோபர் 7ஆம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது.
இந்த நிலையில், ஐந்தாவது நாளை முன்னிட்டு ஏழுமலையானின் கருடசேவை நடைபெற்றது.
கருட சேவையை முன்னிட்டு லக்ஷ்மி ஹாரம், சகஸ்ர நாமாவளி ஹாரம், மகர கண்டி, புஜ கீர்த்தி ஆகிய உள்ளிட்ட பல்வேறு சிறப்பு திருவாபரணங்கள் உற்சவருக்கு சமர்ப்பிக்கப்பட்டன.
அதைத்தொடர்ந்து, ஆந்திர முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி புதிய பட்டு வஸ்திரத்தை தலையில் சுமந்து வழிபாடு செய்தார்.