திருப்பதி ஏழுமலையான் கோவிலில் குரு பவுர்ணமியையொட்டி குறைந்தபட்ச அர்ச்சகர்களை கொண்டு கருட சேவை நடைபெற்றது.
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஒவ்வொரு மாதம் பௌர்ணமி அன்று மலையப்ப சுவாமி கருட வாகனத்தில் நான்கு மாடவீதிகளில் உலா வருவது வழக்கம். தற்போது கொரோனா தொற்று காரணமாக வீதி உலா நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், குரு பௌர்ணமியை முன்னிட்டு நேற்று இரவு கோவிலுக்குள் உள்ள அரங்கநாயகம் மண்டபத்தில் மலையப்ப சுவாமி சிறப்பு அலங்காரத்துடன் கருடவாகனத்தில் வைக்கப்பட்டு பூஜைகள் நடைபெற்றது. ஊரடங்கால் பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், நிகழ்ச்சியில், கோவில் அர்ச்சகர்கள் மற்றும் அதிகாரிகள் மட்டுமே கலந்து கொண்டனர்.