மலர்மாலை, மேள தாளம் முழங்க ஓங்கோல் இனக் காளை உடல் நல்லடக்கம்

ஆந்திர மாநில விவசாயி ஒருவர் உடல்நலக்குறைவால் மரணமடைந்த தன்னுடைய ஓங்கோல் இனக் காளை உடலை மேளதாளம் முழங்க எடுத்துச்சென்று அடக்கம் செய்தது பொதுமக்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது

ஆந்திர மாநிலம் கிருஷ்ணா மாவட்டத்திலுள்ள கன்னவரத்தைச் சேர்ந்த ராஜூ என்ற விவசாயி போத்தி ரெட்டி பள்ளி என்ற ஓங்கோல் காளை ஒன்றை கடந்த 9 ஆண்டுகளாக வளர்த்து வந்தார். இந்த காளை ஆந்திரா மற்றும் தெலுங்கானா மாநிலங்களில் நடத்தப்பட்ட தேசிய அளவிலான 122 போட்டிகள் மற்றும் பல்வேறு உள்ளூர் அளவிலான போட்டிகளில் கலந்துகொண்டு வெற்றி பெற்றுள்ளது. இந்த நிலையில் நேற்று காளை திடீரென மரணமடைந்தது. தனக்கு பெயரையும் புகழையும் பெற்றுத் தந்த தனது பாசமான காளை இறந்ததால் விவசாயி ராஜூ சோகத்தில் மூழ்கினார். இதனையடுத்து, அந்த காளைக்கு சிறப்பான முறையில் இறுதி சடங்களை செய்ய முடிவு செய்த விவசாயி ராஜு, மாட்டின் உடலை மலர் மாலைகளால் அலங்கரித்து மேள தாளம் முழங்க டிராக்டரில் ஊர்வலமாக எடுத்து சென்று அடக்கம் செய்தார்.

Exit mobile version