நாகையில் வீட்டில் பதுக்கி வைத்திருந்த ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர்.
நாகப்பட்டினம் பப்ளிக் ஆபிஸ் ரோட்டில் உள்ள ஒரு வீட்டில் கஞ்சா பொட்டலங்கள் பதுக்கி வைத்து விற்பனை செய்யப்படுவதாக வெளிப்பாளையம் போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது. இதையடுத்து சம்பந்தப்பட்ட வீட்டிக்குள் சென்று போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது 20 பண்டல்களில் கஞ்சா பதுக்கி வைத்திருப்பது தெரியவந்தது. இதையடுத்து, வீட்டில் இருந்த ராணி, ஆனந்த் மீனாட்சி ஆகியோர் தப்பியோடிவிட்டனர். இதையடுத்து, கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார், தப்பியோடிய மூன்று பேரையும் தேடி வருகின்றனர்.
இதேபோல் கோடியக்கரை கடற்கரையில் 12 லட்சம் ரூபாய் மதிப்பிலான 150 கிலோ கஞ்சாவை, வேதராண்யம் கடலோர காவல் குழும போலீசார் பறிமுதல் செய்தனர். கோடியக்கரை கடற்பகுதியில் போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டிருந்தபோது, பதுக்கி வைக்கப்பட்டிருந்த கஞ்சாவை பறிமுதல் செய்தனர். இலங்கைக்கு கடத்துவதற்காக இங்கு கஞ்சா பதுக்கி வைக்கப்பட்டதா? என்பது குறித்தும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.