வேதாரண்யம் பகுதியில் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் மரவள்ளி கிழங்கினால் நூற்றுக்கணக்கான விநாயகர் சிலைகள் செய்யப்பட்டுள்ளன.
நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம் அடுத்த தேத்தாகுடி பகுதியில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு மரவள்ளி கிழங்கின் மூலம் ஏராளமான விநாயகர் சிலைகள் செய்யப்பட்டுள்ளது. இந்த சிலைகளில் ராசயன பொருட்கள் மூலம் வண்ணம் தீட்டமல்,அருணகிரி என்பவர் வாட்டர் மார்க மூலம் கலர் கொடுத்து வருகிறார். சுற்றுச்சூழலுக்கு பாதிப்பில்லாத விநாயகர் சிலைகளை அப்பகுதி மக்கள் ஆர்வமுடன் வாங்கி செல்கின்றனர்.