விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு பல்வேறு வடிவங்களில் விற்பனைக்கு வந்துள்ள விநாயகர் சிலைகளை பொதுமக்கள் ஆர்வத்துடன் வாங்கி செல்கின்றனர்.
செப்டம்பர் 2-ம் தேதி நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி விழா கோலகலமாக கொண்டாடப்படவுள்ளது. இந்நிலையில் விநாயகர் சிலை விற்பனை களைகட்டியுள்ளது. அதன்படி, கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளியில் பாகுபலி விநாயகர், ஏழுமலையான் விநாயகர், ஆஞ்சநேயர் விநாயகர் என 10-க்கும் மேற்பட்ட பல வண்ணங்களில் புது வடிவங்களில் விநாயகர் சிலை வடிவமைக்கப்பட்டுள்ளது. ஓசூர், கிருஷ்ணகிரி உள்ளிட்ட இடங்களில் இருந்து விநாயகர் சிலைகள் கொண்டு வரப்பட்டு தண்ணீரில் எளிதில் கரையக்கூடிய கிழங்கு மாவு மற்றும் மாசுபடியாத பல வண்ணங்கள் சிலைகளின் மீது பூசப்பட்டு விற்பனைக்காக கொண்டு வரப்பட்டுள்ளது. 1 அடி விநாயகர் சிலை 50 ரூபாய்க்கும், 15 அடி விநாயகர் சிலை 13 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.