கஜா புயல் நிவாரண பணிகளுக்காக பல்வேறு தரப்பினர் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியிடம் நிவாரண நிதியை வழங்கினர்

கஜா புயல் நிவாரண பணிகளுக்காக பல்வேறு தரப்பினர் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியிடம் நிவாரண நிதியை வழங்கினர்.

போக்குவரத்து ஊழியர்களின் ஒருநாள் ஊதியமான 13 கோடியே 15 லட்சம் ரூபாய்க்கான காசோலையை முதலமைச்சரிடம் போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் வழங்கினார்.

உச்சநீதிமன்ற பார் அசோசியேசன் சார்பாக 7 லட்சத்து 46 ஆயிரம் ரூபாயும், உச்சநீதிமன்ற நீதிபதி இந்திரா பானர்ஜி வழங்கிய 25 ஆயிரம் ரூபாய்க்கான காசோலைகளும் வழங்கப்பட்டன.

இதேபோன்று, அப்போலோ குழுமம் சார்பாக 1 கோடி ரூபாயாயும், ஆர்.எம்.கே கல்வி குழுமத்தின் சார்பாக 50 லட்சமும் முதலமைச்சரிடம் வழங்கப்பட்டன.

Exit mobile version