தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் இருந்து கஜா புயலால் பாதிக்கப்பட்ட பேராவூரணிக்கு 11 லட்சம் ரூபாய் மதிப்பிலான நிவாரண பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டன.
மூன்று கோடி ரூபாயை கொடுத்த நகராட்சி நிர்வாகம், வருவாய்துறையினருடன் இணைந்து மேற்கொண்ட முயற்சியில், கோவில்பட்டி, எட்டயபுரம், விளாத்திகுளம், ஒட்டப்பிடாரம், கயத்தாறு பகுதிகளில் தன்னார்வலர்களிடம் சேகரித்தனர்.
இதில், அரிசி, பருப்பு, எண்ணெய், மருந்து பொருட்கள், ஆடைகள், பாய்விரிப்புகள் என 8 லட்சம் ரூபாய் மதிப்பிலான நிவாரணப் பொருட்கள் லாரி மூலம் அனுப்பி வைக்கப்பட்டது.