கஜா புயல் நிவாரணப் பணிகளுக்காக தமிழக அரசிடம் இன்றுவரை சுமார் 48 கோடி ரூபாய் அளிக்கப்படுள்ளது.
புயல் நிவாரணப் பணிகளுக்காக அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களின் ஒரு மாத ஊதியம் வழங்கப்படும் என அதிமுக தலைமை கழகம் அறிவித்து இருந்தது. அதன்படி சட்டப் பேரவை தலைவர், கொறடா, அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள், நியமன உறுப்பினர்களின், ஒரு மாத ஊதியமான 86 லட்சத்து 62 ஆயிரத்து 500 ரூபாய்க்கான காசோலையை சபாநாயகர் தனபால் மற்றும் கொறடா ராஜேந்திரன் ஆகியோர் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியிடம்
வழங்கினர்.
தமிழக மீன்வளர்ச்சி கழகத்தின் சார்பாக ஒரு கோடியே 10 லட்சத்திற்கான காசோலையை அமைச்சர் ஜெயக்குமார் வழங்கினார்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் 10 லட்சம் ரூபாய்க்கான காசோலையை முதலமைச்சரிடம் வழங்கினார்.
சுந்தரம் பைனான்ஸ் நிறுவன குழுமத்தின் தலைவர் எஸ்.விஜி, 2 கோடியே 40 லட்சம் ரூபாய்க்கான காசோலையை வழங்கினார்.
சிங்கப்பூர் ஹனிபா குழுமத் தலைவர் ஓ.கே.முகமது ஹனிபா ஒரு கோடி ரூபாய்க்கான காசோலையை வழங்கினார்.
லூகாஸ் டி.வி.எஸ் நிறுவன தலைவர் டி.கே.பாலாஜி ஒரு கோடி ரூபாய்க்கான காசோலையும், சாஸ்திரா பல்கலைக் கழகத்தின் தலைவர் சேதுராமன், ஒரு கோடியே 33 லட்சத்து 10 ஆயிரத்திற்கான காசோலையையும் முதல்வரிடம் வழங்கினர்.
அக்னி ஸ்டீல்ஸ் நிறுவன இயக்குனர் அக்னி சின்னச்சாமி, 25 லட்ச ரூபாய்க்கான காசோலையும், எல்.பி.ஜி டேங்கர்லாரி உரிமையாளர்கள் சங்கத்தின் சார்பில், பொன்னம்பலம் 10 லட்சம் ரூபாய்க்கான காசோலையையும் முதமைச்சர் பழனிசாமியிடம் வழங்கினர்.
இந்நிலையில் இன்றுவரை புயல் நிவாரணத்திற்காக 48 கோடியே 65லட்சத்து 77 ஆயிரத்து 345 ரூபாய் வரவு வைக்கப்பட்டுள்ளது.