தென்னை, வாழை முழுவதும் சேதம் – மத்திய குழுவினரிடம் கண்ணீர்மல்க கோரிக்கை

தஞ்சாவூர் மாவட்டத்தில் ஆய்வு மேற்கொண்ட மத்திய குழுவினரிடம் கஜா புயலால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் கண்ணீர் மல்க தங்களின் குறைகளை தெரிவித்தனர்.

மத்திய உள்துறை இணை செயலாளர் டேனியல் ரிச்சர்ட் தலைமையிலான மத்திய குழுவினர் கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.

அதன் ஒரு பகுதியாக தஞ்சாவூர் மாவட்டம் புதூர் கிராமத்திற்கு சென்ற அவர்களிடம் புயலால் வீடுகளை இழந்த பொதுமக்கள் கண்ணீர்மல்க தங்கள் குறைகளை தெரிவித்தனர். இதேபோல் புலவன்காடு, ஆழடிகுமளை உள்ளிட்ட பகுதிகளில் விவசாயிகளிடம் கோரிக்கைகளை கேட்ட அதிகாரிகள், நெம்மேலி திப்பியாகுடி துணை மின் நிலையத்தையும் பார்வையிட்டனர்.

தொடர்ச்சியாக பட்டுக்கோட்டை வட்டம் அதிராம்பட்டினம் அடுத்த புதுக்கோட்டை உள்ளூர் கிராமத்திற்கு மத்திய குழுவினர் சென்றனர். அங்கு புயலின் வேகத்திற்கு ஈடுகொடுக்க முடியாமல் முறிந்து விழுந்த தென்னை உள்ளிட்ட மரங்களை ஆய்வு செய்தனர்.

அப்போது புயலால் பாதிப்புக்குள்ளான வாழை, பலா உள்ளிட்டவைகளையும் அதிகாரிகளிடம் காண்பித்து உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.

 

 

 

 

 

 

Exit mobile version