புயலால் தஞ்சாவூர் மாவட்டம் திருவையாற்றில் வாழை மரங்கள் சேதம் அடைந்து இருப்பதால், அரசு உரிய நிவாரணம் வழங்கவேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
திருவையாறை சுற்றியுள்ள வளப்பகுடி, நடுகாவிரி, திருபழனம் உள்ளிட்டவை வாழை சாகுபடிக்கு பெயர் போன கிராமங்கள். இங்கு பயிரிடப்படும் வாழைகள் சென்னை, மதுரை, கோவை உள்ளிட்ட இடங்களுக்கும், அண்டை மாநிலங்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டு வருகின்றன.
கஜா புயலால் இந்தப் பகுதிகளில் பயிரிடப்பட்டு இருந்த பல்லாயிரம் கணக்காண வாழை மரங்கள் வேரோடு சாய்ந்தன. இதனால் வாழை விவசாயிகளின் வாழவாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.
தங்களுக்கு உரிய நிவாரணத்தை அரசு வழங்க வேண்டும் என்று வாழை விவசாயிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.