கஜா புயல் பாதித்த டெல்டா மாவட்ட மக்களுக்கு தொழிலதிபர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் சென்னை தலைமை செயலகத்தில் முதலமைச்சரை நேரில் சந்தித்து நிதியுதவி அளித்தனர்.
அதிமுக செய்தி தொடர்பாளரும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான கோ சமரசம், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து ஒரு லட்சம் ரூபாய்க்கான காசோலையை வழங்கினார்.
இதேபோல முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு பி.ஏ. புட்வியர் பிரைவேட் லிமிடெட் நிறுவன மேலாண்மை இயக்குநர் குமரகுருபரசாமி, முதலமைச்சரை நேரில் சந்தித்து 25 லட்சம் ரூபாய்க்கான காசோலையை வழங்கினார்.
கும்பகோணம் பரஸ்பர சகாய நிதி நிறுவன தலைவர் மற்றும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ராம. ராமநாதன், முதலமைச்சரை சந்தித்து 23 லட்சம் ரூபாய்க்கான காசோலையை வழங்கினார்.
பாரத் மேட்ரிமோனி நிறுவன தலைமை செயல்பாட்டு அதிகாரி சங்கர நாராயணன், முதலமைச்சரிடம் 10 லட்சம் ரூபாய்க்கான காசோலையை வழங்கினார்.
இதேபோல, போன்பியூர் கெமிக்கல்ஸ் இந்தியா பிரைவேட் நிறுவன தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநர் பொன்னுசாமி, முதலமைச்சரிடம் 10 லட்சம் ரூபாய்க்கான காசோலையை வழங்கினார்.
தலைமை செலயகத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்த கிளாரியன் பிரசிடெண்ட் ஹோட்டல் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநர் ஏ. அபுபக்கர், 10 லட்சம் ரூபாய்க்கான காசோலையை வழங்கினார்GFx out