புயலால் பாதிக்கப்பட்டுள்ள புதுக்கோட்டை மாவட்டத்தில் குளத்திரில் ஆய்வு செய்த மத்திய குழுவினர், தற்போது காந்திநகர் பகுதிகளில் ஆய்வு செய்து வருகின்றனர்.
தமிழகத்தில் புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்டு, சேத விவரங்களை மதிப்பிட 7 பேர் கொண்ட மத்திய குழு தமிழகம் வந்துள்ளது. சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் பழனிசாமியை மத்திய குழுவினர் இன்று காலை சந்தித்து ஆலோசனை நடத்தினர். இதைத் தொடர்ந்து விமானம் மூலம் திருச்சி சென்ற அவர்கள் அங்கிருந்து புதுக்கோட்டை சென்று புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை ஆய்வு செய்து வருகின்றனர்.
குளத்தூர், கீரனூர் பகுதிகளில் முதல்கட்ட ஆய்வை மேற்கொண்ட அவர்கள் தற்போது காந்திநகர் பகுதியில் ஆய்வை மேற்கொண்டு வருகின்றனர். ஆய்வின் போது பொதுமக்களிடம் பாதிப்புகள் குறித்து கேட்டறிந்தனர். புதுக்கோட்டை, ஆலங்குடி, வடகாடு, வடக்குப்பட்டி, பரமன் நகர், மாங்காடு, கோதியங்குடியிருப்பு உள்ளிட்ட 13 இடங்களில் தொடந்து ஆய்வினை நடத்தவுள்ளனர்.
இன்று ஒரே குழுவாக செல்லும் அதிகாரிகள் நாளை வெவ்வேறு குழுக்களாக சென்று, தஞ்சை நாகை, திருவாரூர் மாவட்டங்களில் ஆய்வினை மேற்கொள்கின்றனர்.