நாகை மாவட்டத்தில் நிவாரண பொருட்களை விநியோகம் செய்யும் பணி தீவிரம்

நாகை மாவட்டத்திற்கு லாரிகள் மூலம் வந்துள்ள பல்வேறு நிவாரணப்பொருட்கள் தனித்தனியாக பிரிக்கப்பட்டு பாதிக்கப்பட்ட மக்களுக்கு விநியோகம் செய்யும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

கஜா புயலால் பாதிக்கப்பட்டு பெரும் சேதம் ஏற்பட்டுள்ள நாகப்பட்டினத்திற்கு பல்வேறு மாவட்டங்களிலிருந்தும் லாரிகள் மூலம் நிவாரணப் பொருட்கள் அனுப்பப்பட்டு வருகின்றன.

அவ்வாறு வரவழைக்கபட்ட பொருட்கள் அனைத்தும் தனித்தனியாக பிரிக்கப்பட்டு அத்தியாவசிய பொருட்களை பாதிக்கப்பட்ட பகுதி மக்களுக்கு விநியோகம் செய்யும் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன.

சோப்பு, பால் பவுடர், பிஸ்கட், அரிசி என அத்தியாவசிய பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. இதுவரை 100க்கும் மேற்பட்ட லாரிகளிலிருந்து கோயம்புத்தூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களிலிருந்தும் நிவாரணப் பொருட்கள் வந்துள்ளன.

Exit mobile version