கஜா புயலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிதி திரட்டும் முயற்சியாக மதுரையில் நாட்டுப்புற கலைஞர்கள் பல்வேறு கலைநிகழ்ச்சிகளை நடத்தினர்.
கஜா புயலில் டெல்டா மாவட்டங்கள் முழுவதும் மிகவும் பாதிப்பிற்கு உள்ளாகி உள்ளன. பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிதியுதவி வழங்கும் வகையில், மதுரையை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட கிராமிய கலைஞர்கள் ஒன்றிணைந்து மதுரையின் முக்கிய பகுதிகளில் தப்பாட்டம், கரகாட்டம், ஒயிலாட்டம் உள்ளிட்ட நடனங்களை நிகழ்த்தி நிதி திரட்டினர்.
மாட்டுத் தாவணியில் ஆரம்பித்த இந்த நிகழ்வு மாலை திருப்பரங்குன்றத்தில் நிறைவடைந்தது. இந்த நிகழ்ச்சியை கண்டுகளித்த பொதுமக்கள் அதிக ஆர்வத்துடன் தங்களால் இயன்ற நிதியுதவியை வழங்கினர்.